அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன்..! முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூட்டாட்சிக் கருத்தியலைக் காத்திடவும், பாசிச சக்திகளை வீழ்த்திடவும் ஜனநாயகக் களத்தை எதிர்கொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவை மீட்பதற்கான அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் திமுக-அதிமுக 18 தொகுதிகளில் நேரடி மோதல்!.
மக்களவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக 18 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட உள்ளது. 2024 மக்களவை தேர்தல் தேதி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல்…
விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை!.
தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர். விருதுநகர் தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகரனை எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல். விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு…
அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!. அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டார்.
அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் :
தேர்தல் பறக்கும் படை சோதனையில் பல லட்சம் பறிமுதல்!.
தருமபுரி அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விழுப்புரத்தில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.30 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!.
பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் அடுத்த மாதம் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும்…
ஓபிஎஸ் அணியுடனும் பாஜக தொகுதிப் பங்கீடு செய்வதில் இழுபறி!.
ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசை தொடர்ந்து ஓபிஎஸ் அணியுடனும் பாஜக தொகுதிப் பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. ஓபிஎஸ் கேட்ட தேனி நாடாளுமன்ற தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்படுவதால் இழுபறி நீடிக்கிறது. த.மா.கா.வுக்கு மயிலாடுதுறை, தஞ்சையை ஒதுக்க பாஜக தயக்கம் காட்டியதால்…
பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!.
பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று…
பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!.
பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இ.ம.க.மு.க. நிறுவனர் தலைவர் டி.தேவநாதன் ஆகியோர் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை!.
திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.20) காலை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். முன்னதாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி எடுத்துரைத்தார். பின்னர் அவர் அறிக்கையை ஸ்டாலின் கைகளில்…
