நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக மத்திய கூட்டுறவு வங்கி அமைப்பது தொடர்பாக அரசாணை வெளியீடு!.
நாமக்கல் மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில் அரசாணை வெளியீடு நாமக்கல் மாவட்டம் 1997-ஆம் ஆண்டு 2 வருவாய் கோட்டங்கள், 8 வட்டங்கள், 30 வருவாய் பிர்க்காக்களுடன் (Firka) உருவாக்கப்பட்டது. 2011…
‘நெஞ்சைப் பதற வைக்கிறது..’ – புதுச்சேரி சிறுமி கொலை குறித்து நடிகர் விஜய் அறிக்கை!
புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப்…
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
20.12.2023-ஆம் தேதி அண்ணா தொழிற்சங்கப் பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களான PMK, TMC, HMS, DMDK, மனித உரிமைகள் கழகம், புதிய நீதிக் கட்சி, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நலச் சங்கம், CITU தலைமையிலான 7 சங்கங்கள் உள்ளடக்கிய கூட்டுக் குழு…
”சமூக விரோதிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியையும் – தாங்கொணாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது. மழலை முகம் மாறாத அச்சிறுமியையும் – அவரது எதிர்கால ஆசைகள் – கனவுகளையும் ஒரே அடியாக சிதைத்துள்ள இக்கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது.…
“உங்கள் நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன்! அதன் அடையாளம்தான் ‘நீங்கள் நலமா’ திட்டம்!”- முதலமைச்சர் அறிக்கை.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நாள்தோறும் பார்த்துப் பார்த்து எத்தனையோ முத்திரைத் திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். அப்படியொரு திட்டம்தான் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘நீங்கள் நலமா?’ என்ற புதிய திட்டம்! புதிய திட்டத்தின் இந்தத் தலைப்பே, மக்களின் மீதான எங்களது…
“நீங்கள் நலமா” என்ற புதிய திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதல்வரின் முகவரி துறையின் கீழ், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறியும் புதுமையான திட்டமான “நீங்கள் நலமா” என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.3.2024) முகாம் அலுவலகத்திலிருந்து தொடங்கி வைத்தார். பின்னர்,…
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: சீமான் வலியுறுத்தல்
புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட செய்தி பேரதிர்ச்சியையும், பெரும்வேதனையையும் தருகிறது. பெற்ற மகளை இழந்து ஆற்ற முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் சிறுமியின் பெற்றோரை என்ன வார்த்தைகள்…
நீங்கள் நலமா திட்டம்” வெட்கக் கேடானது.! ஸ்டாலினை சாடிய டிடிவி
தமிழக மக்களின் குறைகளையும், மனக்குமுறல்களையும் எந்த வகையிலும் நிவர்த்தி செய்ய முடியாத தி.மு.க அரசால் விளம்பரத்திற்காக தொடங்கப்பட்டிருக்கும் ‘நீங்கள் நலமா’ திட்டம் வேடிக்கையானது வெட்கக் கேடானது. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் விளம்பரத்திற்காக மட்டுமே நாள்தோறும் தொடங்கப்படும் திட்டங்களைப் போல ‘நீங்கள்…
ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது-டிடிவி தினகரன்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கும் போதைப் பொருட்களின் தாராள நடமாட்டத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். மாணவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலத்தைக்கேள்விக்குறியாக்கும்…
சாலை விபத்தில் பலத்த காயமடைந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம்.. மு.க. ஸ்டாலின் உத்தரவு.
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், பணகுடி பகுதி – 2 கிராமம், பணகுடி தூய்மைப் பணியாளர் குடியிருப்பில் வசித்து வரும் வசந்தி (வயது 38) க/பெ.முத்துக்குட்டி என்பவர் ஈஸ்ட் விசன் சேரிடபிள் டிரஸ்ட் நிறுவனம் மூலம் பணகுடி பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில்…
