தலைமைச் செயலாளர் ஆலோசனை!..
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கச்சத்தீவை இந்தியாவுக்கு தரவே முடியாது: இலங்கை அதிபர்
கச்சத்தீவை இந்தியாவுக்கு தரவே முடியாது என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மற்றும் மீனவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவது கடந்த 1 வருடமாக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின், குறிப்பாக தமிழகத்திற்கு…
மீன் அங்காடியை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி!..
சென்னை நடுக்குப்பத்தில் மேம்படுத்தப்பட்ட மீன் அங்காடியை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.26.42 லட்சம் மதிப்பீட்டில் மீன்அங்காடி மேம்படுத்தப்பட்டது. ரூ.41 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கைபந்து மற்றும் பேட்மிண்டன் உள் விளையாட்டு அரங்கம் திறந்து வைத்தார்.
பெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை..!
பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு பழனிசாமி மரியாதை செலுத்தினார். மேலும் பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி…
இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து!..
அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நன்நாளாம் “மீலாதுன் நபி” திருநாளில், உலகெங்கும் வாழும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். “உண்மையைப் பேசுதல்; தூய எண்ணத்தோடு வாழ்தல்; ஏழை, எளியோருக்கு உதவிபுரிதல்;…
இலங்கை அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.!
இலங்கை சிறையில் இந்திய மீனவர்களை இழிவுபடுத்தும் இலங்கை அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய-இலங்கைக்கு இடையிலான கடற்பகுதியில், குறிப்பாக கச்சத்தீவின் அருகில் தொன்றுதொட்டு மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு…
செல்வப்பெருந்தகை மீலாது நபி வாழ்த்து!..
இஸ்லாமிய சகோதரர்கள் நபிகள் நாயகம் அவர்களின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இறை தூதரான நபிகள் நாயகம்…
ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செப்.28-ல் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி மதிப்பில் 400 ஏக்கரில் புதிய உற்பத்தி ஆலை அமைய உள்ளது.
தமிழக காங்கிரஸ் பெண் எம்பிக்கு அவமரியாதை: மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி பெண் எம்பியாக இருப்பவர் ஆர்.சுதா. இவர், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராகவும் வழக்கறிஞராகவும் இருக்கிறார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் புதுடெல்லியில் இருந்து காங்கிரஸ் பெண் எம்பி…
சென்னையில் ஏற்பட்ட மின்தடை குறித்து அமைச்சர் விளக்கம்
சென்னையில் நேற்று ஏற்பட்ட மின்தடை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். அதில்,”சென்னை மணலி துணை மின் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்து காரணமாக மாநகரின் சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மின்வாரியத்தின் துரித…