மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமிழ்நாட்டில் செயல்படுகிறதா என சந்தேகப்படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு என்பதே முற்றாக சீரழிந்துள்ளது!. சீமான்
சிவகங்கை கல்லுவழி கிராமத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும்! சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள கல்லுவழி கிராமத்தில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அன்பு இளவல் ஜேக்கப் பாரி அவர்களின்…
இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் பணியிடம்- 60 நபர்களுக்கு பணி நியமன ஆணை!
இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் (நிலை – 3) பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 60 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய…
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயங்குவது ஏன் ? டிடிவி தினகரன்
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 3.5 லட்சம் காலிப்பணியிடங்களை…
குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் குறைக்கப்பட்டிருப்பது தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி!-டிடிவி தினகரன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் குறைக்கப்பட்டிருப்பது தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி – காலிப்பணியிடங்களை உடனடியாக அதிகரிப்பதோடு, குளறுபடி, முறைகேடுகளின்றி தேர்வு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை…
விமானநிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு!
மதுரை விமானநிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்படுவதாக வரும் குற்றச்சாட்டு வருவது குறித்து விமானநிலைய ஆலோசனைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பொழுது அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். கீழே உள்ள காணொலி அந்த குற்றச்சாட்டின் உண்மையை அம்பலப்படுத்துகிறது. இதற்கு பொறுப்பான…
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில்.. முதல்வர் உரை…
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 29.1.2024 அன்று ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில்…
“தமிழ் மாணவர் மன்றம்”-தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் உதயமாகிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், பள்ளி மாணவராக இருந்தபோது தொடங்கிய அமைப்பு “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்”. கலைஞர் நூற்றாண்டில் இப்போது மீண்டும் பற்றத் தொடங்குகிறது அந்த நீறுபூத்த நெருப்பு. தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் உதயமாகிறது “தமிழ் மாணவர் மன்றம்”. அதற்கான…
‘மதுபானங்களின் விலை உயர்வு’ – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!
01.02.2024 முதல் மதுபானங்களின் விலை உயர்வு மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/-…
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்த குற்றச்சாட்டு! ஆளுநருக்கு அமைச்சர் இ.பெரியசாமி பதில்!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வீடுகட்டும் திட்ட செயல்பாடு தொடர்பாகதமிழ்நாடு ஆளுநர் அவர்களின் சமூக ஊடகப் பதிவிற்குஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி அவர்களின் பதிலறிக்கை பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவது தொடர்பாக சில சொந்த கருத்துகளை…
இந்தியா கூட்டணி போல திமுக கூட்டணியும் சிதறும்!. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,அதிமுக தலைமைக் கழகத்தில் தொகுதிப் பங்கீட்டுக் குழு,பிரச்சாரக் குழு மற்றும் விளம்பரக் குழு ஆகிய குழுக்களைச் சேர்ந்தவர்கள்,தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை…
