• Wed. Oct 22nd, 2025

தமிழ்நாடு

  • Home
  • சென்னை மாமன்ற கூட்டத்தில் 54 தீர்மானங்கள்

சென்னை மாமன்ற கூட்டத்தில் 54 தீர்மானங்கள்

மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாமன்ற கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி முழுவதும், வாகனங்களில் சென்று கொசு மருந்து அடிக்க ரூ.2.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மண்டலம் 4, 8 ஆகியவற்றில் குப்பை சேகரிக்கும் பணியை தனியாருக்கு…

பொங்கல் பண்டிகை: வேட்டி, சேலை வழங்கும் திட்டம் – ரூ.100 கோடி ஒதுக்கீடு

2025 பொங்கல் பண்டிகையை ஒட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க 1 கோடியே 77 லட்சத்து 64,776 சேலைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. பொங்கல்…

ஒன்றிய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!..

தமிழ்நாட்டில் பள்ளிகளில் செயல்படுத்தும் திட்டத்துக்கு ரூ.573 கோடி நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சமக்ர சிக்ச அபியான் திட்டத்துக்கு உடனே நிதி ஒதுக்க வேண்டும் என அவர்…

பொறியியல் படிப்பு துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பம்

தமிழகத்தில் பொறியியல் படிப்பு துணைக்கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. www.tneaonline.org, www.dte.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு செப்19-க்கு ஒத்திவைப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை செப்.19ம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். தொகுதி நிதியை…

அதிமுகவுக்கு பாஜக எச்சரிக்கை..!

வார்த்தைகளை அளந்து பேசுங்கள், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் : அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு பாஜக எச்சரிக்கை வார்த்தைகளை அளந்து பேசுங்கள், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்று அண்ணாமலை மீதான அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வார்த்தை தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து…

போக்குவரத்து போலீசார் சார்பில் விபத்தில்லா பயணம் குறித்து விழிப்புணர்வு

எண்ணூர் விரைவு சாலை, திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில் விபத்துல்லா பயணம் என்ற தலைப்பில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி, போக்குவரத்து காவல்துறை சார்பில் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட சண்டை பயிற்சி நடிகர் சாய்…

செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு…

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல், செப்டம்பரில் சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம்…

1,700 ஆண்டு பழமையான பெருமாள் கோயிலை புனரமைக்க வேண்டும்…பொதுமக்கள் கோரிக்கை

அதிகாரிகள் நடவடிக்கைக்கு பக்தர்கள் கோரிக்கை காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் அருகே 1700 ஆண்டுகள் பழமைவாய்ந்த வைகுந்த வாசப் பெருமாள் கோயிலை புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமைவாய்ந்த…

“கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் தந்தை, மகன் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுகிறது” – அண்ணாமலை

கிருஷ்ணகிரியில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே,…