ஜப்பானின் புகுஷிமா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்!.
ஜப்பான் நாட்டில் புகுஷிமாவின் வடக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் வாழ்த்து!.
ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வரும் ஆண்டுகளில் இந்தியா -ரஷ்யா இடையே காலத்திற்கேற்ற வகையில், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இது குறித்து…
நவம்பரில் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் – டிரம்ப் மோதல் உறுதி: 70 ஆண்டுக்கு பின் மறுபோட்டி
அமெரிக்காவில் அடுத்த அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளர்கள் போட்டியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களமிறங்கினர். ஆனால் கட்சியில் போதிய…
கத்தார் பிரதமரை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி கத்தாரின் தோஹாவில் தனது முதல் நிகழ்ச்சியாக கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி-யைச் சந்தித்தார். வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை…
கத்தார் தலைநகர் தோஹா சென்றடைந்தார் பிரதமர்.
கத்தாருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தோஹா சென்றடைந்தார். கத்தாருக்கு பிரதமர் மேற்கொண்டுள்ள இரண்டாவது பயணம் இதுவாகும். அவர் முதல் முறையாக 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் கத்தாருக்குப் பயணம் மேற்கொண்டார். பிரதமரை கத்தார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர்…
பிரதமர், ஐக்கிய அரபு அமீரக பிரதமரை சந்தித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 14 அன்று துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபரும், பாதுகாப்பு அமைச்சரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்தார். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், விண்வெளி, கல்வி…
மடகாஸ்கர் அதிபரை பிரதமர் சந்தித்துப் பேசினார்.
துபாயில் நடைபெறும் உலக அரசுகளின் உச்சிமாநாட்டிற்கு இடையே, மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினாவை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். இரண்டு தலைவர்களுக்கு இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும். இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவு, பழங்கால உறவுகள் குறித்து…
சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை!.
மேன்மை தாங்கிய சீமான்களே, சீமாட்டிகளே வணக்கம். சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். சர்வதேச எரிசக்தி முகமை நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்துக்கள். இந்த கூட்டத்திற்கு…
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரை பிரதமர் சந்தித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அபுதாபி சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார். இரு தலைவர்களும் தனியே…
இங்கிலாந்து மன்னர் விரைவில் குணமடைய வேண்டும் – பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, மேதகு மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு தனது மற்றும் நாட்டு மக்களின் வாழ்த்துகளை இன்று தெரிவித்துள்ளார். மன்னர் சார்லஸ் ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை இங்கிலாந்து அரச குடும்பம் வெளியிட்டிருந்த பதிவுக்கு பதிலளித்து பிரதமர், சமூக…