• Sat. Oct 18th, 2025

நடிகர் சூர்யாவின் கங்குவா பட டீசர் வெளியீடு!.

Byமு.மு

Mar 23, 2024
நடிகர் சூர்யாவின் கங்குவா பட டீசர் வெளியீடு

டிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான கங்குவா பட டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

நடிகர் சூர்யா’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பைச் சமீபத்தில் நிறைவு செய்தார்.தற்போது  இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்த படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. தற்போது ‘கங்குவா’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.  தற்போது இணையத்தில் இந்த டீசர் வரலாகி வருகிறது.