• Sat. Oct 18th, 2025

மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2-வது வழக்குப்பதிவு

Byமு.மு

Aug 30, 2024
மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2-வது வழக்குப்பதிவு

நடிகை அளித்த பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் ஜெயசூர்யா மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நடிகர் ஜெயசூர்யா மீது நேற்று பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவால் நடிகர் ஜெயசூர்யாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2-வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து நடிகர் ஜெயசூர்யா முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளார்.