• Thu. Oct 23rd, 2025

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 41 போதை அடிமை, மறுவாழ்வு சிகிச்சை மையங்களை மத்திய அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்.

Byமு.மு

Feb 7, 2024
புதுதில்லியில் உள்ள Dr.AIC இல் 41 போதைப் பழக்கம் மற்றும் மறுவாழ்வு மையங்களை மத்திய அமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்.

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 41 போதை அடிமை மறுவாழ்வு சிகிச்சை மையங்களை நாளை காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.

போதைப்பொருள் உபயோகத்தைக் கட்டுப்படுத்த, மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் தேசிய செயல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்குக் கடந்த காலத்தில் போதைக்கு அடிமையானவர்களுக்கு போதைப் பொருளின் தீமை குறித்த கல்வி, விழிப்புணர்வு உருவாக்கம், திறன் மேம்பாடு, தொழில் பயிற்சி, வாழ்வாதார ஆதரவு ஆகியவற்றிற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

மேலும், இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்படுத்துவதன் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது செயல்பட்டு வரும் போதைப் பொருள் இல்லாத பாரதத் திட்டத்தை அமைச்சகம் தொடங்கியுள்ளது. உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துதல், சமூகத்தை சென்றடைதல், திட்டங்களின் உரிமையை பெறுதல் ஆகியவற்றில் இது சிறப்பு கவனம் செலுத்துகிறது.

அரசு மருத்துவமனைகளில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை வசதிகளை ஏற்படுத்துவதே போதைப் பொருள் இல்லாத  பாரதத் திட்டத்தின் நோக்கமாகும். மேலும் இது தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்படுகிறது, போதைப் பொருள் சிகிச்சை மறுவாழ்வு மையங்களை அமைப்பதற்காக நாட்டில் 125 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.