பிரதமரின் வழிகாட்டுதலின்படி, அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் / ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள், தங்களது பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக 2015 மார்ச் மாதத்தில் ‘அனுபவ் இணையதளம்’ என்ற ஆன்லைன் தளத்தை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (டிஓபிடபிள்யூ) அறிமுகப்படுத்தியது. ஓய்வு பெற்றவர்கள் குறிப்புகளை விட்டுச் செல்லும் இந்தக் கலாச்சாரம் எதிர்காலத்தில் நல்லாட்சி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கு அடித்தளமாக மாறும் என்று கருதப்படுகிறது.
2024-ம் ஆண்டுக்கான அனுபவ் விருதுகள் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க, ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள் / ஓய்வூதியதாரர்கள் ஓய்வு பெறுவதற்கு 8 மாதங்களுக்கு முன்பும், ஓய்வு பெற்ற ஒரு வருடத்திற்குப் பிறகும் தங்கள் அனுபவங்கள் குறித்த கருத்துகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளின் மதிப்பீட்டிற்குப் பிறகு கட்டுரைகள் வெளியிடப்படும். வெளியிடப்பட்ட கட்டுரைகள் அனுபவ் விருதுகள் மற்றும் ஜூரி சான்றிதழ்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும். அனுபவ் விருதுகள் திட்டம் 2024 இன் கீழ் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31.3.2024 ஆகும். 2016 முதல் 2023 வரை இதுவரை 54 அனுபவ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்படி, 2023 ஜூலை31 முதல் 2024 மார்ச்31 வரை அனுபவ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அனைத்து அனுபவ கட்டுரைகளும் 05 அனுபவ் விருதுகள் மற்றும் 10 ஜூரி சான்றிதழ்களுக்கு பரிசீலிக்கப்படும்.
அனுபவ் விருதுகள் திட்டம், 2024 இல் பரந்த பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக, ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் தனது அனுபவத்தை சமர்ப்பிப்பதை உறுதிசெய்யும் வகையில் மக்கள்தொடர்பு பிரச்சாரத்தை டிஓபிபிடபிள்யூ மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக, அமைச்சகங்கள்/ துறைகள் மற்றும் சிஏபிஎஃப்களின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அனுபவ் இணைய தளத்தில் அனுபவங்களை உரிய நேரத்தில் சமர்ப்பிப்பதற்காக ஓய்வூதியர்களை அணுகுமாறு அமைச்சகங்கள் / துறைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. விருது பெற்ற பரிந்துரைகளை ஆவணப்படுத்தும் வடிவம் குறித்த அறிவு பகிர்வு அமர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.
அனுபவ் விருது பெற்றவர்கள் ஸ்பீக் வெபினார் தொடரின் கீழ் ஒரு தேசிய மன்றத்தில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.