• Sat. Oct 18th, 2025

பதினாறாவது நிதிக்குழு உறுப்பினர்களை அரசு நியமனம்!

Byமு.மு

Jan 31, 2024
பதினாறாவது நிதிக்குழு உறுப்பினர்

நித்தி ஆயோக் முன்னாள் தலைவர் அரவிந்த் பனகாரியாவை தலைவராகக் கொண்டு 31.12.2023 அன்று பதினாறாவது நிதிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் இக்குழுவின் உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1.அஜய் நாராயண் ஜா, 15-வது நிதிக்குழு முன்னாள் உறுப்பினர்  மற்றும் செலவினத்துறை முன்னாள் செயலாளர்முழுநேர உறுப்பினர்
2.அன்னி ஜார்ஜ் மேத்யூ, செலவினத்துறை முன்னாள் சிறப்புச் செயலாளர்முழுநேர உறுப்பினர்
3.டாக்டர் நிரஞ்சன் ரஜதியக்ஷ, நிர்வாக இயக்குநர், அர்தா குளோபல்முழுநேர உறுப்பினர்
4.டாக்டர் செளமியா காந்தி கோஷ், குழுமத் தலைமைப் பொருளாதார ஆலோசகர், பாரத ஸ்டேட் வங்கிபகுதிநேர உறுப்பினர்

குழுவின் பரிந்துரை விதிமுறைகள் 31.12.2023 அன்று அறிவிக்கப்பட்டன.

2026, ஏப்ரல் 1 அன்று தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கான பரிந்துரைகளை 2025 அக்டோபர் 31-க்குள் அளிக்குமாறு 16-வது நிதிக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.