• Sun. Oct 19th, 2025

தேசபக்தி பாடலை பாடியதற்குப் பிரதமர் பாராட்டு!

Byமு.மு

Jan 29, 2024
தேசபக்தி பாடலை பாடியதற்கு பிரதமர் பாராட்டு

எகிப்திலிருந்து  வந்திருந்த கரீமன், 75-வது குடியரசு தின கொண்டாட்டங்களின் போது நாட்டுப்பற்றுப் பாடலான “தேஷ் ரங்கீலா” பாடலைப் பாடியதற்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது எதிர்காலம் பிரகாசமாக அமைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“எகிப்தைச் சேர்ந்த கரிமனின் இந்தப் பாடல் இனிமையானது! இந்த முயற்சிக்காக நான் அவரை வாழ்த்துகிறேன், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு மிகச் சிறந்த வாழ்த்துகள்.”