• Tue. Oct 21st, 2025

பிஎஸ்என்எல் வழங்கும் தொழில் வாய்ப்பு!.

Byமு.மு

Feb 8, 2024
பிஎஸ்என்எல் வழங்கும் தொழில் வாய்ப்பு

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) கோயம்புத்தூர் (ஆர்.எஸ்.புரம்), திருச்சி (அரியலூர்-ஜெயம்கொண்டம்), கடலூர் (விழுப்புரம்-செஞ்சி), காரைக்குடி (காரைக்குடி), வேலூர் (திருப்பத்தூர்) ஆகிய இடங்களில் பிஎஸ்என்எல் மொபைல் சிம் கார்டுகள்,  ரீசார்ஜ் கூப்பன்கள் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளை விற்பனை செய்வதற்கான உரிமையாளராக புதிய வணிகப் பங்குதாரர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்து, தேவையான தகுதியைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம், சிஎம் வணிக உரிமைக்கான ஆர்வ வெளிப்பாடு வெளியிடப்பட்டுள்ளது; இதில் ஆர்வமுள்ள நிறுவனங்கள் பங்கேற்கலாம். ஆர்வமுள்ள நிறுவனங்கள் குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் ஆண்டு வருவாய்  & டெலிகாம்/ எஃப்எம்சிஜி/ எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரிக்கல் அல்லது நிறுவப்பட்ட சில்லரைத்  தொடர்களைக் கொண்ட பிற தயாரிப்புகளின் விநியோகஸ்தர் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று வருட அனுபவத்துடன் இருக்க வேண்டும். அதேசமயம் அரியலூர்-ஜெயம்கொண்டம் பகுதிக்கு ஆண்டு வருவாய்  மற்றும் அனுபவத் தகுதி முறையே ரூ 30 லட்சம் மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு வருடம் ஆகும்.

ஆர்வ வெளிப்பாட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 22 அன்று மதியம் 2 மணி அல்லது அதற்கு முன் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, http://www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx