• Thu. Apr 9th, 2026

இரண்டு நாள் பயணமாக லண்டன் செல்கிறார்-மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

Byமு.மு

Jan 7, 2024
இரண்டு நாள் பயணமாக லண்டன் செல்கிறார்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸுடன் பேச்சு நடத்துகிறார்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக ஜனவரி  08  அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் செல்கிறார். அவருடன்  பாதுகாப்புத் துறை, டி.ஆர்.டி.ஓ, முப்படைகளின் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அடங்கிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் உயர்மட்டக் குழுவும் செல்கிறது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் தமது பயணத்தின் போது, இங்கிலாந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸுடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொள்ள உள்ளார். பாதுகாப்பு, தொழில்துறை ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ராஜ்நாத் சிங் தமது பயணத்தின்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கையும், வெளியுறவுத்துறை , காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி விவகாரங்கள்துறை அமைச்சர் டேவிட் கேமரூனையும் சந்திக்க உள்ளார்.  இங்கிலாந்து பாதுகாப்புத் துறையின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் கலந்துரையாடும் அவர், அங்குள்ள இந்திய சமூகத்தினரையும் சந்திக்க உள்ளார்.