இந்தியாவில் சமூக வானொலியின் 20 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மண்டல சமூக வானொலி விழா இன்று நடைபெற்றது. உலக வானொலி தினமாகவும் கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், இந்திய வெகுமக்கள் தொடர்பு நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் சிறப்புரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், வானொலியின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டுதான் பிரதமர் நரேந்திர மோடி “மனதின் குரல்” நிகழ்ச்சியை தொடங்கி கோடானுகோடி மக்களுடன் உரையாடி வருகிறார் என்றும், அவர்களின் மனஉணர்வுகளை அறிந்து வருகிறார் என்றும் கூறினார்.
சமூக வானொலி என்பது மக்களுடன் மிக நெருக்கமாக இருக்கிறது என்றும், குரலற்றவர்களின் குரலாக இருப்பதோடு உள்ளடக்க விஷயங்களை உள்ளூர் மொழிகளில் தருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டுவதில் மக்களின் பங்கேற்புக்கு சமூக வானொலி முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.
சமூக வானொலி திட்டத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா வாஜ்பாய் 2002-ல் ஒப்புதல் அளித்தார் என்பதையும், அண்ணா பல்கலைக்கழகத்தின் 2004-ம் ஆண்டு முதலாவது சமூக வானொலி அமைக்கப்பட்டது என்பதையும் அனுராக் தாக்கூர் நினைவுகூர்ந்தார். 2014 வரை நாட்டில் 140 ஆக இருந்த சமூக வானொலி நிலையங்களின் எண்ணிக்கை 2024-ல் 481 ஆக அதிகரித்துள்ளது என்றும், இவற்றில் தென் மண்டலத்தில் மட்டும் 117 சமூக வானொலி நிலையங்கள் இருக்கின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சமூக வானொலி நிலையங்களை அமைப்பதற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், ஒரு அமைப்பு ஒன்றுக்கும் அதிகமான வானொலி நிலையங்களைக் கொண்டிருக்கலாம் என்றும், உரிம காலம் 5 ஆண்டு என்பது 10 ஆண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். விளம்பரத்திற்கான நேரம் 7 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது என்றும், 10 விநாடிகளுக்கான விளம்பரக் கட்டணம் 52 ரூபாயிலிருந்து 74 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இப்படிப்பட்ட மாற்றங்கள் காரணமாக சமூக வானொலி நிலையங்களின் எண்ணிக்கை விரைவில் ஆயிரத்தைத் தாண்டும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். சமூக வானொலி நிலையங்களின் பயன்பாடுகளை மேம்படுத்த ஆலோசனைகள் தமது அமைச்சகத்தால் வரவேற்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
இந்த விழாவில் குரல் பதிவு வழியாக உரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு 2500 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாகவும், இது தகவல் தொடர்பு முறையை வலுப்படுத்தவும் உதவும் என்றார். மலை, கடல், காடு என நாட்டின் எல்லைப்பகுதிகளில் உள்ள கிராமங்கள் கடைசி கிராமங்கள் அல்ல, அவை முதல் கிராமங்கள் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு ஏற்ப இத்தகைய கிராமங்களில் சமூக வானொலி நிலையங்களை செயல்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.
மண்டல அளவில் தொழில்நுட்ப மற்றும் நிகழ்ச்சி மேம்பாட்டுடன் தூர்தர்ஷனில் புதிதாக தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதை அடுத்து உலகம் முழுவதும் அதன் வீச்சு அதிகரித்துள்ளது என்று அமைச்சர் கூறினார். மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
சமூக வானொலி நிலையங்கள் தொடங்க 10 லட்சம் ரூபாய் வரை அரசு நிதியுதவி வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் இந்திய வெகுமக்கள் தொடர்பு நிறுவனத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் நிமிஷ் ரஸ்தோகி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜே.பிரகாஷ், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக அதிகாரி கௌரி சங்கர் கேசர் வாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










