• Sun. Oct 19th, 2025

பொய்களைப் பரப்புவது தான் மோடியின் உத்தரவாதம்! – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

Byமு.மு

Feb 8, 2024
பொய்களைப் பரப்புவது தான் மோடியின் உத்தரவாதம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், தண்டி யாத்திரையிலும், “வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும்” பங்கேற்காதவர்கள், இன்று காங்கிரசுக்கு தேசபக்தியின் அறிவை புகட்டுகிறார்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பற்றி எண்ணற்ற பொய்யான விஷயங்களை மோடி கூறினார். நான் கேட்க விரும்புகிறேன்

1. UPA காலத்தில் வேலையின்மை விகிதம் 2.2% ஆக இருந்தது, உங்கள் காலத்தில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏன் இருக்கிறது ?

2. UPA ஆட்சியின் 10 ஆண்டுகளில், சராசரி GDP வளர்ச்சி விகிதம் 8.13% ஆக இருந்தது, உங்கள் காலத்தில் 5.6% மட்டும் ஏன்?
உலக வங்கியின் கூற்றுப்படி, 2011-லேயே , இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறி இருந்தது.

10 ஆண்டுகளில் 14 கோடி மக்களை (பல பரிமாணமங்களில்) வறுமையிலிருந்து வெளியே கொண்டு வந்தோம். பேச்சுக்களை ஆங்காங்கே சுருக்கி குழப்பத்தையும் பொய்யையும் பரப்புகிறீர்கள்.

3. டிஜிட்டல் இந்தியாவில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம், ஆதார்-டிபிடி-வங்கி கணக்கின் கீழ் UPA ஆல் அதன் அடித்தளம் அமைக்கப்பட்டது.

2014 வரை 65 கோடி பேருக்கு ஆதார் கொடுத்துள்ளோம் . DBT-PAHALல் இருந்து மானியப் பணிகள் தொடங்கப்பட்டன. ஸ்வாபிமான் யோஜனா திட்டத்தின் கீழ் 33 கோடி ஏழைகளின் வங்கிக் கணக்குகளையும் தொடங்கினோம்.

4. மோடி அவர்கள் பொதுத்துறை நிறுவனங்களைப் பற்றி ஏதோ சொன்னார். ஏப்ரல் 2022க்குள் 147 பொதுத்துறை நிறுவனங்களின் முழு/பாதி/அல்லது பகுதி தனியார்மயமாக்கலுக்கு உங்களின் “விற்பனை மற்றும் கொள்ளை” கொள்கை வழிவகுத்தது என்பதை நினைவூட்டுகிறோம்.

5. அரசில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன, அவற்றில் SC, ST, OBC பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ளன. ரயில்வே, எஃகு, சிவில் விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு (துருப்புக்கள் இல்லாமல்) மற்றும் பெட்ரோலியம் ஆகிய 5 அமைச்சகங்களில் மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

6. நீங்கள் ஏக்லவ்யா பள்ளிகளைப் பற்றிப் பேசினீர்கள், ஆனால் அவற்றில் 70% ஆசிரியர்கள் ஒப்பந்தத்தில் மட்டுமே உள்ளனர் என்று சொல்லவில்லை.

7. கடந்த 10 ஆண்டுகளில் நமது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இடைவெளி மூன்று மடங்கு அதிகரித்துள்ளதையும், இந்த உண்மை தெரிந்திருந்தும், அரசு அதை ஒரு பிரச்சனையாக ஏற்றுக் கொள்ளாமல், முன்னேற்றமடையாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

மோடி அவர்களே, இரு அவைகளிலும் உங்களின் பேச்சுக்களில் காங்கிரஸைத்தான் திட்டினீர்கள்.

8. 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தும் தன்னை பற்றி பேசாமல் காங்கிரசை மட்டும் விமர்சிக்கிறார். இன்றும் பணவீக்கம், வேலைவாய்ப்பு, பொருளாதார சமத்துவம் பற்றி பேசவில்லையே?

9. உண்மையில் அரசாங்கத்திடம் எந்த தரவுகளும் இல்லை. NDA தானே அதாவது No Data Available Government – மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை, பொருளாதார கணக்கெடுப்பு இல்லை, வேலைவாய்ப்பு தரவு இல்லை, சுகாதார கணக்கெடுப்பு இல்லை. அரசு அனைத்து புள்ளிவிவரங்களையும் மறைத்து பொய்களை பரப்புகிறது.

பொய்களைப் பரப்புவது தான் மோடியின் உத்தரவாதம்! இவ்வாறு மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.