• Sun. Oct 19th, 2025

புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Byமு.மு

Mar 6, 2024
புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

புதுச்சேரி மாநிலம், 5ம் வகுப்பு படித்து வந்த 9வயது சிறுமி , கொடுர மனம் படைத்த சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு , கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை, தெரிவித்துக்கொள்கிறேன்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு போக்சோ சட்டங்கள் மட்டும் போதாது, இத்தகைய காட்டுமிராண்டிகளுக்கு உட்சப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், அதுவே இது போன்ற குற்றங்கள் இனி தொடராமல் பாதுகாக்கும் எனவும் வலியுறுத்துவதுடன்.

பச்சிளம் குழந்தையை இழந்து வாடும் பெற்றோரின் வேதனையில் நானும் உங்களது குடும்பத்தில் ஒருவனாக பங்கெடுத்துக் கொள்வதுடன், அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.