இந்திய எரிசக்தி வாரம்- 2024, கோவாவில் 2024 பிப்ரவரி 6 முதல் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் கோவா மாநில அரசு நிர்வாகம் உட்பட பல்வேறு அரசுத் துறைகள், இந்த மாநாட்டுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன.
இந்திய எரிசக்தி வாரம் – 2024 கண்காட்சி மற்றும் மாநாட்டில் 35,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 350க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். 400-க்கும் மேற்பட்ட மாநாட்டு அமர்வுகளில் 80க்கும் மேற்பட்ட பேச்சாளர்களும் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 4,000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு உலகளாவிய கண்காட்சியாளர்களின் விரிவான தகவல்களை வழங்கும்.
இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த மாநாடு மற்றும் கண்காட்சி, பிரமாண்டமானதாகவும், மாறுபட்டதாகவும், சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற முதல் மாநாடு மற்றும் கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.