• Fri. Oct 24th, 2025

2024, பிப்ரவரி 11 குடியரசு துணைத்தலைவர் மகாராஷ்டிராவின் கோண்டியாவுக்குப் பயணம்

Byமு.மு

Feb 9, 2024
பிப்ரவரி 11 குடியரசு துணை தலைவர் மகாராஷ்டிராவின் கோண்டியாவுக்குப் பயணம்

குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் 2024, பிப்ரவரி 11, அன்று மகாராஷ்டிராவின் கோண்டியாவில் ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார்.

குடியரசு துணைத் தலைவர் தனது பயணத்தின்போது, மாநிலத்தின் கோண்டியா மற்றும் பண்டாரா மாவட்டங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்குவார்.

கோண்டியா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் சிறப்பு விருந்தினராகக் குடியரசு துணைத்தலைவர் கலந்து கொள்கிறார்.

தமது பயணத்தின்போது, மறைந்த மனோகர்பாய் படேலின் 118-வது பிறந்த நாளை நினைவுகூரும் நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.