• Sun. Oct 19th, 2025

முன்னாள் முதலமைச்சரின் மகள் கைது… அமலாக்கத்துறை அதிரடி

Byமு.மு

Mar 16, 2024
முன்னாள் முதலமைச்சரின் மகள் கைது... அமலாக்கத்துறை அதிரடி

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக கவிதா மீது, அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பி இருந்தது. அதனை எதிர்த்தும், வழக்கில் பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத்தில் கவிதா மனுதாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை வருகின்ற 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில்,  ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில்  உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கவிதாவின் சகோதரர் கே.டி.ராமராவுக்கும் சோதனை நடத்திய அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிகாரிகள் நடத்திய சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதன் முடிவில்  கவிதா கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், கவிதா கைது செய்யப்பட்டு இருப்பது தெலங்கானா அரசியல் முக்கிய சம்பவமாக கருதப்படுகிறது. கைது நடவடிக்கையை தொடர்ந்து பிஆர்எஸ் கட்சியினர் தெலங்கானாவில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்   கவிதாவை கைது செய்தது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பணமோசடி தடுப்புச் சட்டத்தில் கவிதா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.