• Sun. Oct 19th, 2025

ஹரியானா தேர்தல்: பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை!..

Byமு.மு

Sep 20, 2024
ஹரியானா தேர்தல்: பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை

ஹரியானாவில் அக்டோபர் 5ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஃபரிதாபாத்தில் நேற்று பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய சோதனையில், 3 வாகனங்களில் இருந்து சுமார் ரூ.2.8 கோடி ரொக்கம் பறிமுதல் செய்தனர். அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலானதில் இருந்து (ஆகஸ்ட் 16) தற்போது வரை, 3.26 லட்சம் லிட்டர் மதுபானங்கள், 2,340 கிலோ போதைப்பொருட்கள், 48 கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள், கணக்கில் வராத ரொக்கப் பணம் என மொத்தம் ரூ.27 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.