இந்தியத் தர நிர்ணய நிறுவனம் (பிஐஎஸ்), சென்னை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நடத்தியது.
பி.ஐ.எஸ் மற்றும் நாட்டிலுள்ள தரநிலைப்படுத்தல் சூழலைப் பற்றிய மேலோட்டம்; தரநிலைகளை உருவாக்குவதில் ஆராய்ச்சித் திட்டங்களின் பங்கு; பி.ஐ.எஸ் போன்றவற்றின் டிஜிட்டல் முயற்சிகள் முதலிய அம்சங்களை உள்ளடக்கியதாகப் பயிலரங்கம் நடைபெற்றது.
கல்வி பாடத்திட்டத்தில் தரப்படுத்தல் தொடர்பான தலைப்புகளை அறிமுகப்படுத்துதல், தரப்படுத்தல் குறித்த பயிற்சி மற்றும் குறுகிய கால கல்வி திட்டங்கள் முதலியவற்றை ஏற்பாடு செய்வதன் மூலம், கல்வி நிறுவனங்கள் மற்றும் அதன் ஆசிரியர்களுக்கு தரப்படுத்தும் சூழல் அமைப்புகளை விரிவுபடுத்துவதை இது நோக்கமாகக் கொண்டிருந்தது.
பி.ஐ.எஸ் அதிகாரிகள் குழு திருமதி. ஜி. பவானி, விஞ்ஞானி – இ/ இயக்குனர், தலைமை சென்னை கிளை அலுவலகம், கௌதம் பி ஜே, விஞ்ஞானி டி, சென்னை கிளை அலுவலகம், சிராக் குமார் பவனேஷ் குமார் ஷா, விஞ்ஞானி சி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, அசோக் குமார், விஞ்ஞானி பி, மின் தொழில்நுட்ப துறை, சாகிப் ராஹி, விஞ்ஞானி பி, உலோகவியல் பொறியியல் துறை, மாட்சா அருண் குமார், விஞ்ஞானி பி, வேதியியல் துறை ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பயிலரங்கை நடத்தினர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர். கே.ஆர்.சாந்தா, கல்வித்துறைத் தலைவர், நிறுவன ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.எஸ்.கோபிநாத், , மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் சுமார் 100 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


