இந்தியத் தர நிர்ணய அமைவனம் தனது கல்விப் பரவல் திட்டத்தின் ஒரு பகுதியாக, வேல் டெக் மல்டி டெக் டாக்டர்.ரங்கராஜன் டாக்டர்.சகுந்தலா பொறியியல் கல்லூரியுடன் 17 நவம்பர் 2023 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின், சென்னைக் கிளை அலுவலகம் வேல் டெக் மல்டி டெக் டாக்டர்.ரங்கராஜன் டாக்டர்.சகுந்தலா பொறியியல் கல்லூரியில் இன்று (11 ஜனவரி 2024), ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், கல்வி நிறுவனங்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள், தரப்படுத்தல் மற்றும் இணக்க மதிப்பீடு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்வதன் மூலமும், நிறுவனங்களில் தரப்படுத்தலுடன் தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கான உள்கட்டமைப்பு ஆதரவை மேம்படுத்துவதன் மூலமும், கல்வி பாடத்திட்டத்தில் தரப்படுத்தல் பற்றிய தலைப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், தரப்படுத்தல் குறித்த பயிற்சி மற்றும் குறுகிய கால கல்வித் திட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலமும், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பணியகத்தின் தொழில்நுட்ப குழுக்கள் மூலம் தரப்படுத்தல் நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலமும் தர நிர்ணய அமைப்புகளின் விரிவுபடுத்துவதை பிஐஎஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.
BIS அதிகாரிகளான திருமதி. ஜி. பவானி, விஞ்ஞானி – இ/இயக்குனர், தலைமை சென்னை கிளை அலுவலகம், திரு. கௌதம், விஞ்ஞானி – டி, சென்னை கிளை அலுவலகம், திரு. சிராக் குமார் பவனேஷ் குமார் ஷா, விஞ்ஞானி – சி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, திரு. அசோக் குமார், விஞ்ஞானி – பி, எலக்ட்ரோடெக்னிக்கல் துறை, திரு. மாட்சா அருண் குமார், விஞ்ஞானி – பி, வேதியியல் துறை நிகழ்ச்சியில் பங்கேற்று பயிலரங்கை நடத்தினர்.
இந்த பயிலரங்கில் இந்தியத் தர நிர்ணய அமைவனம் பற்றியும், நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பை தரநிலைப்படுத்துதல் , தரநிலைகளை உருவாக்குவதில் ஆராய்ச்சி திட்டங்களின் பங்கு, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் டிஜிட்டல் முயற்சிகள் பற்றிய அம்சங்கள் இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சியில், வேல் டெக் மல்டி டெக் டாக்டர். ரங்கராஜன் டாக்டர். சகுந்தலா பொறியியல் கல்லூரியின் டாக்டர். வி. ராஜாமணி, முதல்வர்; டாக்டர் கே.ஏ. ஹரிஷ், கல்வி ஒருங்கிணைப்பாளர்; டாக்டர்.வி.பிரபு, நோடல் அதிகாரி மற்றும் பேராசிரியர் & தலைவர், இசிஇ துறை மற்றும் சுமார் 100 வேல் டெக் மல்டி டெக் டாக்டர்.ரங்கராஜன் டாக்டர்.சகுந்தலா பொறியியல் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 100 ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்தியத் தர நிர்ணய அமைவனம், மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது தொழில்துறையின் நலனுக்காகவும், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டும் தயாரிப்பு சான்றிதழ் (ஐ.எஸ்.ஐ குறியீடு), மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் / கலைப் பொருட்களுக்கான ஹால்மார்க் முத்திரை மற்றும் ஆய்வக சேவைகள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.