• Sat. Oct 18th, 2025

காஷ்மீர் முதல்வராக உமர்அப்துல்லா இன்று பதவி ஏற்பு

Byமு.மு

Oct 16, 2024
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இன்று பதவியேற்பு

காஷ்மீரில் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களை பெற்றது.


சுயேச்சை எம்எல்ஏ.க்கள் 5 பேர், ஒரு ஆம்ஆத்மி எம்எல்ஏ ஆகியோர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்துடன் கவர்னர் மனோஜ்சின்ஹாவை கடந்த 11ம் தேதி உமர்அப்துல்லா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்று புதிய ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைத்துள்ளார். இன்று காலை 11.30 மணிக்கு நகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் விழாவில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதல்முறையாக முதல்வர் பதவியை உமர் அப்துல்லா ஏற்க உள்ளார்.

* அரியானா முதல்வர் இன்று தேர்வு

அரியானாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 90 இடங்களில் பா.ஜ 48 இடங்களை வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 37 இடங்களில் வென்றது. புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.இதில் மீண்டும் நயாப்சிங் சைனியே புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.