• Sat. Oct 18th, 2025

நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு ரத்து- கர்நாடகா ஹைகோர்ட்

Byமு.மு

Dec 4, 2024
சமூக வலைதளங்களில் சரியான தகவலை பகிர்ந்திடுக: நிர்மலா சீதாராமன் பேச்சு

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, பாஜ முன்னாள் மாநில தலைவர் நளின் குமார் கட்டீல், பாஜ மாநில தலைவர் விஜயேந்திரா, அமலாக்கத்துறை, பாஜ அலுவலக பணியாளர்கள் ஆகியோர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி திலக் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் மீது ஐபிசி 354, 120பி மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி 4வது குற்றவாளியும், முன்னாள் எம்.பியும், பாஜ முன்னாள் மாநிலத் தலைவருமான நளின் குமார் கட்டீல் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா மற்றும் விஜயேந்திரா உள்ளிட்டோர் மீது போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.