மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப் பிரதமர் பிரியாவிடை
“நமது நாட்டின் ஜனநாயகம் குறித்த ஒவ்வொரு விவாதத்திலும் டாக்டர் மன்மோகன் சிங் இடம்பெறுவார்”
“இந்த சபை பலதரப்பட்ட அனுபவங்களால் வடிவமைக்கப்பட்ட ஆறு ஆண்டுப் பல்கலைக்கழகம்
மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப் பிரியாவிடை அளித்துப் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
மக்களவை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறுகிறது என்றும், மாநிலங்களவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உயிர்ச் சக்தி பெறுகிறது என்றும் பிரதமர் கூறினார். அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரியாவிடை நிகழ்ச்சி, புதிய உறுப்பினர்களுக்கு அழியாத நினைவுகளையும், விலைமதிப்பற்ற பாரம்பரியத்தையும் விட்டுச் சென்றுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
டாக்டர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை நினைவுகூர்ந்த பிரதமர், “நீண்ட காலமாக அவையையும், நாட்டையும் வழிநடத்தி வருவதால், நமது நாட்டின் ஜனநாயகம் குறித்த ஒவ்வொரு விவாதத்திலும் அவர் இடம்பெறுவார்” என்று கூறினார். வழிகாட்டும் விளக்குகளாகத் திகழும் இத்தகைய மதிப்புமிக்க உறுப்பினர்களின் அனுபவங்கள் மற்றும் நன்னடத்தையை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று பிரதமர் ஆலோசனை கூறினார்.
முன்னாள் பிரதமர் சக்கர நாற்காலியில் அமர்ந்து அவையில் வாக்களித்ததை, ஒரு உறுப்பினர் தமது கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருப்பதற்கு ஊக்கமளிக்கும் உதாரணமாக இருந்தது என்று பிரதமர் நினைவு கூர்ந்தார். ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கவே அவர் வந்தார் என்று நான் நம்புகிறேன் என்று பிரதமர் கூறினார். அவர் நீண்ட, ஆரோக்கியமான ஆயுளுடன் வாழப் பிரதமர் மோடி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் பொதுத் தளத்திற்குப் புறப்படும் உறுப்பினர்கள் மாநிலங்களவை அனுபவத்திலிருந்து பெரிதும் பயனடைவார்கள் என்று பிரதமர் கூறினார். “இது ஆறு ஆண்டு பன்முகத்தன்மை கொண்ட பல்கலைக்கழகம். இது அனுபவங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளியேறும் எவரும் செழுமைப்படுத்தப்பட்டு தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை வலுப்படுத்துகிறார்கள்” என்று அவர் கூறினார்.
தற்போதைய தருணத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இன்று விடைபெறும் உறுப்பினர்களுக்குப் பழைய மற்றும் புதிய கட்டிடத்தில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றும், அவர்கள் அமிர்த காலம் மற்றும் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளின் சாட்சியாக அங்கிருந்து திரும்புகிறார்கள் என்றும் கூறினார்.
கொவிட் பெருந்தொற்றின் போது நிச்சயமற்ற தன்மை நிலவியதை நினைவு கூர்ந்த பிரதமர், சபையின் செயல்பாட்டிற்கு எந்தத் தடையும் ஏற்படுத்தாத உறுப்பினர்களின் உறுதிப்பாட்டைப் பாராட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த உறுப்பினர்களுக்குப் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, சபை அதை கருணையுடன் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் கூறினார்.
எதிர்க்கட்சியினரால் கருப்பு நிற உடைகள் அணியப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்த பிரதமர், நாடு செழிப்பின் புதிய உயரங்களை எட்டி வருவதாகவும், இந்தச் சம்பவம் நாட்டின் முன்னேற்றத்திற்கான பயணத்திற்குக் ‘கருப்புப் பொட்டு’ மூலம் கண் திருஷ்டியை விரட்டும் முயற்சியாகப் பார்க்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
பண்டைய புனித நூல்களை மேற்கோள் காட்டிய பிரதமர், நல்ல சகவாசத்தை வைத்திருப்பவர்கள் ஒரே மாதிரியான குணங்களை வளர்த்துக் கொள்கிறார்கள் என்றும், கெட்ட சகவாசத்தால் சூழப்பட்டவர்கள் குறைபாடுடையவர்களாக ஆகிறார்கள் என்றும் விளக்கினார்.
ஒரு நதியின் நீர் ஓடும்போது மட்டுமே குடிக்கத் தகுதியானதாக இருக்கும், அது கடலில் கலக்கும்போது உப்பாக மாறும் என்று அவர் மேலும் கூறினார். இந்த நம்பிக்கையுடன், தமது உரையை நிறைவு செய்த பிரதமர், ஓய்வு பெறும் உறுப்பினர்களின் அனுபவம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று கூறினார். அவர்களுக்குப் பிரதமர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..