பிரதமர் நரேந்திர மோடி, மேதகு மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு தனது மற்றும் நாட்டு மக்களின் வாழ்த்துகளை இன்று தெரிவித்துள்ளார்.
மன்னர் சார்லஸ் ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை இங்கிலாந்து அரச குடும்பம் வெளியிட்டிருந்த பதிவுக்கு பதிலளித்து பிரதமர், சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
“மாட்சிமை தங்கிய மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவாக குணமடையவும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க விரும்பும் இந்திய மக்களுடன் நானும் இணைகிறேன்.”