• Tue. Oct 21st, 2025

இந்தியாவில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க கனரக தொழில்கள் அமைச்சகம்  நிலையான நடவடிக்கை.

Byமு.மு

Feb 6, 2024
இந்தியாவில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க கனரக தொழில்கள் அமைச்சகம்  நிலையான நடவடிக்கை

இந்தியாவில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க கனரக தொழில்கள் அமைச்சகம்  நிலையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  விரைவாக மின்சார வாகனத்தை உற்பத்தி செய்து  பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் எனப்படும் ஃபேம் (FAME-II) திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மின்சார வாகன பயனர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக பொது மின்னேற்ற (சார்ஜிங்) உள்கட்டமைப்பை அமைப்பதற்கான மானிய வடிவிலான நிதி உதவி வழங்கும் திட்டமும் அடங்கும்.

நாட்டில் பொது மின்சார வாகன மின்னேற்ற உள்கட்டமைப்பை நிறுவுவதை விரைவுபடுத்த மின்சார அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பொது மின்னேற்ற நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

02.02.2024 நிலவரப்படி, மின்சார அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, நாடு முழுவதும் 12,146 எண்ணிக்கையிலான பொது மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை 643 மையங்கள் செயல்படுகின்றன.

மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கனரகத் தொழில்துறை இணையமைச்சர் கிருஷன் பால் குர்ஜார்  இதனைத் தெரிவித்துள்ளார்.