பிரபல ஹிந்தி இலக்கியவாதி பண்டிட் ஹரிராம் துவிவேதி மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அங்கனையா, ஜீவந்தாயினி கங்கா போன்ற கவிதைத் தொகுப்புகள் மற்றும் பல்வேறு கவிதைகளுடன், அவர் எப்போதும் நம்முடன் இருப்பார் என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“சிறந்த இலக்கிய எழுத்தாளரும், காசியில் வசிப்பவருமான பண்டிட் ஹரிராம் துவிவேதியின் மறைவு வருத்தமளிக்கிறது. அங்கனியா, ஜீவந்தாயினி கங்கா போன்ற கவிதைத் தொகுப்புகள் மற்றும் பல்வேறு கவிதைகளுடன், அவர் எப்போதும் நம் வாழ்க்கையில் இணைந்திருப்பார். ஸ்ரீசரண்களில் அவருக்கு இடம் கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”