• Tue. Oct 21st, 2025

பட்டாசு ஆலையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்.

Byமு.மு

Feb 6, 2024
பட்டாசு ஆலையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு தொழிற்சாலையில் நேரிட்ட விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவித் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

“மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேரிட்ட விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்.”