பராக்கிரம தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று, நேதாஜியின் வாழ்க்கை மற்றும் தீரத்துக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
“பராக்கிரம தினத்தை முன்னிட்டு இந்திய மக்களுக்கு எனது வாழ்த்துகள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று, அவரது வாழ்க்கை மற்றும் தீரத்திற்கு மரியாதை செலுத்துவோம். நமது தேசத்தின் சுதந்திரத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.”