• Sun. Oct 19th, 2025

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து!.

Byமு.மு

Feb 27, 2024
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியத்துடனும் திகழவும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி, தனது குதிகாலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

முகமது ஷமியின் எக்ஸ் பதிவுக்கு பிரதமர் பதிலளித்து எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

“நீங்கள் விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்கவும்  விரும்புகிறேன், @MdShami11! உங்களுடைய துணிச்சலுடன் இந்தக் காயத்தை நீங்கள் எதிர்கொண்டு மீண்டு வருவீர்கள் என்று நான் நம்புகிறேன்.”