• Sun. Oct 19th, 2025

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்!.

Byமு.மு

Feb 5, 2024
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று தொடங்கப்பட்டது. தங்கள் கைகள், கருவிகளால் வேலை செய்யும் கைவினைஞர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை மூலம் அங்கீகாரம், திறன் மேம்பாடு, கருவிகள் வாங்குவதற்கான ஊக்கத்தொகை, கடன் ஆதரவு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை, சந்தைப்படுத்தல் ஆதரவு ஆகியவை இத்திட்டத்தின் கூறுகளில் அடங்கும்.

17.09.2023 அன்று திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 30.01.2024 வரை பிரதமரின் விஸ்வகர்மா இணையதளத்தில் வெற்றிகரமான பதிவுகளின் எண்ணிக்கையில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் விஸ்கர்மா திட்டத்திற்காக 2023 -24-ம் ஆண்டில் 1,860 கோடி ரூபாயும், 2024 -25-ம் ஆண்டில் 4,824 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின்  விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட பயனாளிகள்
எண்ணிக்கையின்படி 2023-24-ம் ஆண்டில் 6,00,000 பேரும், 2024-25-ம் ஆண்டில் 18,00,000 பேரும் உள்ளனர்.  

மொத்தம் 3,23,556 பதிவுகள் பிரதமரின் விஸ்கர்மா திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.