• Fri. Oct 24th, 2025

சிறப்பு ரயில்களின் போக்குவரத்து தொடரும்.

Byமு.மு

Feb 8, 2024
சிறப்பு ரயில்களின் போக்குவரத்து தொடரும்

காரைக்கால், திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் நேர மாற்றம்

நாகர்கோவில்-திருவனந்தபுரம் விரைவு ரயில் வழித்தடம் நீட்டிப்பு

தாம்பரம் – சந்திரகாச்சி அதிவேக சிறப்பு ரயிலின் இயக்கம் பிப்ரவரி 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இந்த ரயிலின் இயக்கம் பிப்ரவரி 15 முதல் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம்-பிரம்மபூர் முன்பதிவற்ற வாராந்திர சிறப்பு ரயிலின் இயக்கம் மார்ச் 02-ம் தேதி முதல் மார்ச் 30–ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இந்த ரயிலின் இயக்கம் மார்ச் 4 முதல் ஏப்ரல் 1 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயிலின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் (பிப்ரவரி 9) இந்த ரயில் காரைக்காலிலிருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45-க்கு திருச்சிராப்பள்ளியை வந்தடையும்.

நாகர்கோவில்-திருவனந்தபுரம்-நாகர்கோவில் சிறப்பு விரைவு ரயில் கேரள மாநிலம் கொச்சுவேலி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் 1 முதல் இந்த ரயில் திருவனந்தபுரத்தையும் தாண்டி கொச்சுவேலி வரை செல்லும் என்றும், இனி இந்த ரயில் நாகர்கோவில்-கொச்சுவேலி சிறப்பு விரைவு ரயில் என்று அழைக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இந்த ரயில் மார்ச் 2 முதல் தனது இயக்கத்தைத் துவக்க உள்ளது.