• Sun. Oct 19th, 2025

கேரள முதல்வருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

Byமு.மு

Mar 1, 2024
கேரள முதல்வருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி

தங்களது இதயப்பூர்வமான வாழ்த்துகளுக்கு நன்றி தோழரே!

ஒடுக்கப்பட்டோரையும் பாட்டாளிகளையும் உயர்த்தும் நம் சீரிய முயற்சியில் திராவிடம் மற்றும் பொதுவுடைமை இயக்கத்தின் ஆழமான கொள்கைகளால் ஊக்கம் பெற்றுக் கரம் கோப்போம்!

நாம் இருவரும் கூட்டாக இணைந்து நமது மாண்புக்குரிய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாத்துப் போற்றுவோம்! இப்பயணத்தில் உங்களது ஆதரவும் ஊக்கமும் அளவிட முடியாதது!