புதுச்சேரி துணைநிலை ஆளுநர், மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பை தமிழிசை சவுந்தராஜன் ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு தமிழிசை அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பான செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- “தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் எனவும் இன்று மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.