• Sun. Oct 19th, 2025

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது!..

Byமு.மு

Sep 12, 2024
காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. அக்டோபர் மாதம் தர வேண்டிய 20 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட வலியுறுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில், அக்டோபர் மாதம் காவிரியில் நீர் பங்கீடு குறித்து காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.