• Sat. Oct 18th, 2025

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாகவே கரையை கடக்கும் என கணிப்பு!..

Byமு.மு

Nov 29, 2024
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாகவே கரையை கடக்கும் என கணிப்பு

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக வலுப்பெறாது என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் இயற்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வலுவிழந்து கரையை கடக்கும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது புயலாகவே கரையை கடக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கரையை கடக்கும் சமயத்தில் 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனவும் இடையிடையே 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, சென்னையில் தென் கிழக்கே 400 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பு; காற்றின் வேகம் 64.8km/hr (35 நாட்ஸ்) இருந்தால் அதனை புயல் எனக் கூறுவோம், தற்போதுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 83km/hr (45 நாட்ஸ்) வரை வலுப்பெற வாய்ப்பு. மேகக் கூட்டங்கள் அடர்த்தியாக உள்ளதாக இன்று பிற்பகல் முதல் மீண்டும் மழையை எதிர்பார்க்கலாம்; மரக்காணத்தில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது, “இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.