• Sat. Oct 18th, 2025

நிதியமைச்சர் 6ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Byமு.மு

Feb 1, 2024
நிதியமைச்சர் 6ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

அடுத்த ஐந்தாண்டுகளில் கிராமப்புற வீட்டு வசதித்திட்டத்தின்கீழ் மேலும் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதலாவது இடைக்கால பட்ஜெட் இதுவாகும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

  • பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது, முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.
  • மகளிர் தொழில் முனைவோருக்கு 30 கோடி முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • பலமுனை பொருளாதார நிர்வாக மேம்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • முத்தலாக் முறை நீக்கப்பட்டுள்ளது.
  • மகளிருக்கு அதிகாரமளித்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
  • ஜிஎஸ்டி வரிவிதிப்பு, ஒரே தேசம்-ஒரே சந்தைக்கு வழிவகுத்துள்ளது.
  • அனைத்துத்தரப்பு வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
  • வரி அடிப்படையிலான வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி உத்வேகம் அளிக்கிறது.
  • மொத்தமாக 43 கோடி முத்ரா கடன்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
  • மிக அதிகமான பணவீக்க தருணத்தில் ஜி20 உச்சிமாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
  • தனிநபர் சராசரி வருமானம் 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
  • ஜிஎஸ்டி அமலாக்கம் மூலம் வரி கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது
  • அடுத்த 5 ஆண்டுகள் வளர்ச்சிக்கான ஆண்டுகளாக அமையும்.
  • ஊரகப் பகுதிகளில் 70 சதவீத வீடுகள் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு தயாராகி வருகிறது.
  • நவீன கட்டமைப்புடன் கூடிய வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க உறுதி.
  • கிழக்கு பகுதியை வலிமைமிக்க உந்துசக்தியாக மாற்ற நடவடிக்கை.
  • ஒருகோடி வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி தகடுகள் அமைக்க நடவடிக்கை.
  • அடுத்த ஐந்தாண்டுகளில் கிராமப்புற வீட்டு வசதித்திட்டத்தின்கீழ் மேலும் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு.
  • விரைவில் கூடுதல் மருத்துவக் கல்லுாரிகள் அமைக்கப்படும்.
  • ஆஷா மருத்துவ உதவியாளர்கள் ஆயுஷ்மான் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்படவுள்ளனர்.
  • கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசிக்கு ஊக்கமளித்தல்.
  • விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கப்படும்.
  • அங்கன் வாடி பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் திட்டப் பலன்கள் வழங்கப்படும்.
  • எண்ணெய் வித்துக்களுக்கான சுயசார்பு இயக்கம் அமலாக்கப்படும்.
  • பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்.
  • ஒட்டுமொத்த பால் பண்ணை உற்பத்திப் பொருட்கள் மேம்பாடு.
  • 2014 முதல் கடல்சார் உணவு ஏற்றுமதி இருமடங்காக அதிகரித்து ஒரு லட்சம் கோடியை எட்ட இலக்கு.
  • பால்பண்ணை உரிமையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிய திட்டம்.
  • ஐந்து ஒருங்கிணைந்த கடல் உயிரின பூங்காக்கள் அமைக்கப்படும்.
  • மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • பெண்களை லட்சாதிபதியாக்கும் திட்டத்தின் உத்வேகம் பிறதுறை சார் பெண்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
  • புதிய கண்டுபிடிப்புகள் வளர்ச்சியின் அடித்தளமாக அமையும்.
  • தொழில்நுட்பங்கள் மூலம் பாதுகாப்புத்துறையை மேம்படுத்த நடவடிக்கை.
  • தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கான பொற்காலமாக அமிர்த காலம் அமையும்.
  • புதிய ரயில் வழித்தடங்கள் அமைப்பதற்கான புதிய இயக்கம்.
  • ரயில் போக்குவரத்து அதிகம் நிறைந்த வழித்தடங்கள் அமைக்கப்படும்.
  • இதன்காரணமாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்.
  • வந்தேபாரத் ரயில்களை அதிக எண்ணிக்கையில் இயக்க முடிவு.
  • விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடரும்.
  • மெட்ரோ ரயில் திட்டங்கள், நமோ பாரத் ரயில் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதோடு தொடர்ந்து பல்வேறு நகரங்களுக்கு இவை விரிவுபடுத்தப்படும்.
  • மேலும் 3 ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும்.
  • பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் தொடரும்.
  • 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க இலக்கு.
  • வந்தே பாரத் ரயில்களுக்காக 40,000 ரயில்பெட்டிகள் உற்பத்தி செய்யப்படும்.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகன கட்டமைப்பை உருவாக்க முடிவு.
  • ஜி20 உச்சிமாநாடு இந்தியாவின் பன்முகத்தன்மையை உலகிற்கு பறைசாற்றியது.
  • ஜி20 உச்சிமாநாடு சுற்றுலாத்துறையை வலுப்படுத்தியுள்ளது.
  • துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்த முன்னுரிமை.
  • உள்நாட்டு சுற்றுலாவில் கவனம் செலுத்தப்படும், இது சுற்றுலா சார்ந்த வர்த்தகர்களுக்கு ஊக்கம் அளிக்கும்.
  • மாநிலங்களுக்கு 50 ஆண்டுகால வட்டியில்லா கடன் வழங்க முடிவு.
  • தீவுப் பகுதிகளில் துறைமுகங்கள் அமைக்க திட்டம்.
  • வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் மாநிலங்களுக்கும் பங்களிக்கப்படும்.
  • லட்சத்தீவுகளில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
  • வருவாய் இனங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும்.
  • வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான முழு செயல்திட்டம் புதிய அரசின் முழு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.
  • 2024 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட செலவினத் தொகை 44.90 லட்சம் கோடி ரூபாய்.
  • திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 5.8 சதவீதம்.
  • திருத்தியமைக்கப்பட்ட வருவாய் மதிப்பீடு 27.56 லட்சம் கோடி ரூபாய்.
  • நாட்டின் ஒட்டுமொத்த கடன் தொகை 14 லட்சம் கோடியாக உள்ளது.
  • நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளது.
  • வரிசெலுத்துவோரின் ஆதரவுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
  • ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் இணக்க நடைமுறைகள் குறைக்கப்படும்.
  • வரிசெலுத்துவோருக்கான சேவைகளில் முன்னேற்றம் காண அரசு உறுதி.
  • நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.
  • புத்தொழில் நிறுவனங்களுக்கு வரி ஊக்கத்தொகை.
  • நடுத்தர வகுப்பினருக்கான வீட்டு வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • சுற்றுலா மேம்பாட்டுக்காக நீண்டகால அடிப்படையிலான கடன் உதவி.

சுமார் ஒருமணிநேரமாக வாசித்து வந்த இடைக்கால பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்.

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நாடாளுமன்ற மக்களவையின் இன்றைய நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.