பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஏழை, மகளிர், இளைஞர்கள் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கியப் பிரிவினர் மீது கவனம் செலுத்துவதை அரசு உறுதியாக நம்புகிறது. 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் இதனைத் தெரிவித்தார்.
“அவர்களின் தேவைகள், அவர்களின் விருப்பங்கள், அவர்களின் நலன் எங்களின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும். அவர்கள் முன்னேறினால் நாடு முன்னேறும். இந்த நான்கு பிரிவினரும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான தேடலில் அரசின் ஆதரவைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் நல்வாழ்வை மேற்கொள்ளுதல் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும்” என்று அவர் மேலும் கூறினார்.
சமூக நீதி என்பது பயனுள்ள மற்றும் தேவையான நிர்வாக மாதிரி என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஊழலைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம் வெளிப்படைத்தன்மை ஏற்பட்டுள்ளது என்றும், தகுதியான அனைத்து மக்களுக்கும் பலன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேற்கண்டவற்றை நேரடி மானியத் திட்டம் எவ்வாறு சாதித்தது என்பது பற்றி அவர் குறிப்பிட்டார். அரசின் கவனம் திட்டங்களின் விளைவுகளில் உள்ளது, செலவினங்களில் அல்ல. என அவர் மேலும் தெரிவித்தார்.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ‘வளர்ச்சி அடைந்த பாரதமாக’ மாற்றுவதற்கு ஏற்ப வளர்ச்சியை நோக்கிய அரசின் அனைத்துத் தரப்பினர் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை உள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இந்த இலக்கை அடைய, மக்களின் திறனை மேம்படுத்தி, அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்..