• Sun. Oct 19th, 2025

கத்தார் தலைநகர் தோஹா சென்றடைந்தார் பிரதமர்.

Byமு.மு

Feb 15, 2024
கத்தார் தலைநகர் தோஹா சென்றடைந்தார் பிரதமர்.

கத்தாருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தோஹா சென்றடைந்தார். கத்தாருக்கு பிரதமர் மேற்கொண்டுள்ள இரண்டாவது பயணம் இதுவாகும். அவர் முதல் முறையாக 2016-ம் ஆண்டு ஜூன் மாதம்  கத்தாருக்குப் பயணம் மேற்கொண்டார்.

பிரதமரை கத்தார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சோல்தான் பின் சாத் அல்-முரைக்கி, விமான நிலையத்தில் வரவேற்றார்.

கத்தாரில் தமது இரண்டு நாள் பயணத்தின் போது, பிரதமர் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி வழங்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். 

பிரதமர் கத்தார் அமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியைச் சந்தித்து இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.