சென்னையில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில் பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்: உலக முதலீட்டாளர் மாநாட்டிலும் அமைச்சர் பங்கேற்கிறார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், சென்னையில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில் நாளை (07-01-2024) பங்கேற்க உள்ளார்.
நாளை சென்னை வரும் பியூஷ் கோயல் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து சென்னையில் பெரியார் நகர் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் நடைபெறும் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில் அவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது மத்திய அரசின் நலத்திட்டப் பயன்களை, பயனாளிகளுக்கு அவர் வழங்க உள்ளார்.