• Tue. Oct 21st, 2025

சென்னை, கே கே  நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையில் மறுவாழ்வு சிகிச்சை மையத்தை மத்திய அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்.

Byமு.மு

Feb 7, 2024
இஎஸ்ஐசி மருத்துவமனையில் மறுவாழ்வு சிகிச்சை மையத்தை மத்திய அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமான போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் கீழ், செயல்படுத்தப்படும்.  41 மறுவாழ்வு சிகிச்சை மையங்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் புதுதில்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்திலிருந்து, காணொலிக் காட்சி மூலம் நாளை தொடங்கி வைக்கிறார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர்கள் ராம்தாஸ் அத்வாலே, எஸ். ஏ. நாராயணசாமி, பிரதிமா பௌமிக், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோல் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் 41 மறுவாழ்வு சிகிச்சை மையங்களில் சென்னை, கே கே  நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மையமும் ஒன்றாகும்.

போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் கீழ், அமைச்சகம் நாடு முழுவதும் மறுவாழ்வு மற்றும் சிகிச்சை அமைக்கப்படுகின்றன. இவை சமூக நீதி மற்றும் 100 சதவீதம் நிதி அளிக்கப்பட்டு புதுதில்லி எய்ம்ஸ் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.