• Sun. Oct 19th, 2025

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை

Byமு.மு

Aug 22, 2024
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒன்றிய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஒன்றிய அரசு ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் இடம் ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதி பெயரையும் கேட்டு படிவத்தில் குறிப்பிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.