• Sun. Oct 19th, 2025

குடியரசுத் துணைத்தலைவர் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டிற்கு பயணம்!

Byமு.மு

Jan 27, 2024
குடியரசுத் துணைத்தலைவர் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டிற்கு பயணம்

மும்பையில் நடைபெறும் சட்டமன்ற அமைப்புகளின் தலைமை அதிகாரிகளின் 84-வது மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் உரையாற்றுகிறார்

“VIKSIT BHARAT@2047” என்ற தலைப்பில் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுடன் குடியரசுத் துணைத்தலைவர் கலந்துரையாடுகிறார்.

குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் 2024 ஜனவரி 28-29 தேதிகளில் மும்பை (மகாராஷ்டிரா), புதுச்சேரி மற்றும் கடலூருக்கு (தமிழ்நாடு) இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

முதல் நாளில், மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நடைபெறும் இந்திய சட்டமன்ற அமைப்புகளின் தலைமை அதிகாரிகளின் 84-வது மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் உரையாற்றுவார்.

பிற்பகலில், குடியரசுத் துணைத்தலைவர் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுடன் “வளர்ச்சியடைந்த பாரதம் @2047” என்ற தலைப்பில் கலந்துரையாடுகிறார்.

தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ தில்லை நடராஜர் கோயில், பாபாஜி கோயில் மற்றும் ஸ்ரீ எல்லையம்மன் கோயில் ஆகியவற்றில் தரிசனம் மற்றும் பிரார்த்தனை செய்கிறார்.