• Sun. Oct 19th, 2025

நாடு முழுவதும் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவான மற்றும் அதிகாரமளிக்கும் சூழலை உருவாக்குவோம்!

Byமு.மு

Jan 5, 2024
நாடு முழுவதும் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவான மற்றும் அதிகாரமளிக்கும் சூழலை உருவாக்குவோம்

நாடு முழுவதும் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவான மற்றும் அதிகாரமளிக்கும் சூழலை உருவாக்குவோம்: மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி

சாலையோர வியாபாரிகள்  சட்டம் 2014-ன் படி, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், அவர்களுக்கான தீர்வுகளை அளித்தல், அவர்களை  உரிய முறையில் கையாளுதல் ஆகியவற்றில் குறை தீர்க்கும் குழுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.  சாலையோர வியாபாரிகள் தங்கள் வணிகம் செய்வதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கு திறன் வாய்ந்ததாக குறைதீர்க்கும் குழுக்கள் செயல்பட வேண்டியது முக்கியம் என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள இந்தியா ஹேபிடேட் மையத்தில் நேற்று (04.01.2024) நடைபெற்ற சாலையோர வியாபாரிகளுக்கான குறைதீர்க்கும் குழு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய மத்திய அமைச்சர், குறைதீர்க்கும்  குழுக்களை அமைத்துள்ள மாநிலங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இந்தக் குழுக்களை அமைக்காத மாநிலங்கள் விரைந்து குழுக்களை அமைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.  நகர்ப்புற முறை சாரா  பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில், சாலையோர வியாபாரிகள் பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது புதுப்பிக்கப்பட்ட PAiSA என்ற இணையதளத்தையும்,  பிரதமரின் ஸ்வநிதி  இயக்கத்தின் கண்காணிப்பு இணையதளத்தையும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி தொடங்கி வைத்தார்.  இந்த இணையதளம் வணிகர்களுக்கான திட்டங்களை வெளிப்படையாகச் செயல்படுத்துவதை உறுதி செய்யும்.