• Sat. Oct 18th, 2025

மக்களுடன் முதல்வர் திட்டம்

Byமு.மு

Jan 11, 2024
மக்களுடன் முதல்வர் திட்டம்

மாவட்டம்: பெருநகர சென்னை மாநகராட்சி

நாள் : 11.01.2024
வார்டு எண் : 87
நேரம் : 9 மணி முதல் மதியம் மூன்று மணி வரை
இடம் : அன்னை மஹால்-பாடி

வழங்கப்படும் சேவைகள்

எரிசக்தித் துறை/ தமிழ்நாடு மின்சார வாரியம்

• புதிய மின் இணைப்பு

• மின் கட்டண மாற்றங்கள்

• மின் இணைப்பு பெயர் மாற்றம்

• மின் கம்பங்கள் மாற்றம்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

• பட்டா மாறுதல் / பட்டா உட்பிரிவு நில அளவீடு (அத்து காண்பித்தல்

• வாரிசுச் சான்றிதழ் / சாதிச் சான்றிதழ் / வருமானச் சான்றிதழ் / இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை / ஊரக வளர்ச்சித் துறை

• கட்டுமான வரைபட ஒப்புதல்

• சொத்து வரி / குடிநீர் வரி பெயர் மாற்றங்கள்

• வர்த்தக உரிமம் வழங்குதல்

• குடிநீர் / கழிவுநீர் இணைப்பு

• பிறப்பு / இறப்புச் சான்றிதழ்

• திடக்கழிவு மேலாண்மை

PMSVAnidhi

• முதியோர் / கைம்பெண் /

கணவனால் கைவிடப்பட்டவர் / மாற்றுத் திறனாளி/ முதிர்கன்னி / மூன்றாம் பாலினத்தோருக்கான உதவித் தொகைகள்

காவல் துறை

• பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான புகார்கள்

• நில அபகரிப்பு / மோசடி / வரதட்சணை மற்றும் இதர புகார்கள்

• போஸ்கோ சட்டத்தின் கீழ் புகார்கள்

மாற்றுத் திறனாளிகள் துறை

• பராமரிப்பு உதவித் தொகை

• மாற்றுத் திறனாளிக்கான பெட்ரோல் ஸ்கூட்டர்

• சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, செயற்கைக் கால், காது கேட்கும் கருவி, இதர உதவி உபகரணங்கள்

• சுய தொழில் வங்கிக் கடன் உதவி

• கல்வி உதவித் தொகை

• தொழிற் பயிற்சி

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

• கட்டுமான வரைபட ஒப்புதல்

• நில உபயோக மாற்றத்திற்கான ஒப்புதல்

• தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடத்தில் வீடு வேண்டி விண்ணப்பித்தல்

• வீட்டுவசதி வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான விற்பனைப் பத்திரம்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான ஆணை / விற்பனைப் பத்திரம்

• நில உபயோக மாற்றத்திற்கான தடையின்மைச் சான்று

• மனை வரன்முறை

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை / ஆதிதிராவிடர் நலத் துறை / பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை / கூட்டுறவுத் துறை

• பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்

• புதுமைப் பெண் கல்வி உதவித் திட்டம்

• கல்வி உதவித் தொகை (ஆதிதிராவிடர். பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர்)

• ஆதிதிராவிடர் நலத் துறையில் வழங்கப்படும் இலவச வீட்டுமனை பட்டா

சலவைப் பெட்டி / தையல் இயந்திரம் மற்றும் இதர உதவிகள்

• தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்

• தாட்கோ கடனுதவி

டாம்கோ / டாப்செட்கோ / கூட்டுறவுக் கடனுதவிகள் / / மகளிர் சுய உதவிக் குழுக்கள்

(முகாமில் கலந்துகொள்பவர்கள், தங்களது கோரிக்கையினைக் கணினியில் பதிவுசெய்ய வேண்டியிருப்பின், அக்கோரிக்கைக்கான அனைத்து ஆவணங்களையும் கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும்)