• Wed. Nov 5th, 2025

Trending

பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை 2-வது-நாளாக சரிவு

பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை 2-வது-நாளாக சரிந்து சவரன் ரூ.52,000த்திற்கும் கீழ் சென்றது. இந்த விலை குறைப்பு இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ஒன்றிய பட்ஜெட்…

13 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கிவைத்தார் அமைச்சர் சிவசங்கர்..

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 13 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் BS 6 ரக 10 புறநகர் பேருந்துகள், 3 நகரப் பேருந்துகள் சேவை தொடக்கம் செய்யப்பட்டது.

ஒன்றிய நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்றம்: மாயாவதி

சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தன் டிவிட்டர் பதிவில், “2024-25 நிதிநிலை அறிக்கை பழைய முறையையே பின்பற்றுகிறது. அதில் ஒருசில பணக்காரர்களை தவிர, ஏழைகள், பெண்கள், விவசாயிகள், வேலையற்ற இளைஞர்கள், புறக்கணிக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. வேலையில்லா திண்டாட்டம்,…

100 நாள் வேலை திட்டத்துக்கு குறைவான நிதி ஒதுக்கீடு..!

100 நாள் வேலை திட்டத்துக்கு ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.86,000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 100 நாள் வேலை திட்டத்துக்கு செலவான ரூ.1.05 லட்சம் கோடியைவிட குறைவாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 10…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்கு தொடந்துள்ளது. தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சேலம், கள்ளக்குறிச்சி ஆட்சியர்கள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் ஜூன் 18ம் தேதி…

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல் செய்தார். சட்டவிரோத பணபரிமாற்ற…

விஷச்சாராய உயிரிழப்புகள் 37 ஆக அதிகரிப்பு… விஷச்சாராய உயிரிழப்புகள் கவலை தருகிறது ..தமிழ்நாடு ஆளுநர் ரவி இரங்கல்!

விஷச்சாராய உயிரிழப்புகள் கவலை தருகிறது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயம் குடித்தனர். அவர்களில் பல பேருக்கு வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு…

விஷச் சாராயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்க: விசிக

விஷச் சாராயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் வலியுறுத்தியுள்ளார். விஷச் சாராயம் விற்றவர் மட்டுமின்றி, அதனை தயாரித்தவர் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதையில்லா தமிழ்நாடு என்ற முதலமைச்சரின்…

விஷச் சாராயம் பற்றி தகவல் தெரிவிக்க எண்களை அறிவிப்பு..!

திருப்பத்தூரில் விஷச் சாராயம் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல்துறை எண்களை அறிவித்துள்ளது. 91599 59919 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் திருப்பத்தூர் எஸ்.பி. தெரிவித்துள்ளார். தகவல் கொடுப்போரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பு!..

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் விசாரணை ஆணையம் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…