வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 24ம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்; இன்றைய சில நாளிதழ்களில் குவைத்தில் கைதான இராமநாதபுரம் மாவட்டத்தைச்…
நேரு முதல் ராஜீவ் வரை அந்த குடும்பத்தை சேர்ந்த பிரதமர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய மோடி, “அம்பேத்கர் மட்டும் இல்லையென்றால் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டுக்கு நேரு அனுமதி தந்திருக்க மாட்டார். எஸ்சி எஸ்டிக்கான இட…
காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் புகழாரம் சூட்டியுள்ளார். நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி என செல்லூர் ராஜூ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 2 நாட்களுக்கு முன்…
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,770க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.92.50க்கு விற்பனை…
சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு அதிபரை ஜீ ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் ஐந்தாவது முறையாக மீண்டும் அதிபராகியுள்ளார். இதனை தொடர்ந்து முதல் வெளிநாட்டு பயணமாக…
பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி தலைமையிலான அமர்வில் ராஜேஷ் தாஸ் வழக்கு விசாரணைக்கு வந்தது. பெண் எஸ்.பி.க்கு பாலியல்…
ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் புதிய வாக்குறுதி அளித்துள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயவேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசியவர்களின் பட்டியலில் 661 ரன்களை குவித்து முதலிடத்தில் இருக்கிறார் விராட் கோஹ்லி. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ள நிலையில், கோஹ்லி உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு சாதகமாக மாறியுள்ளது. விராட் கோஹ்லி 35 வயதை…
தங்கத்தின் விலை கடந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. புதிய…