ஓராண்டுக்கும் குறைவாக உள்ள நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியை உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி. வைப்புத்தொகைக்கான வட்டியை கால் சதவீதம் முதல் முக்கால் சதவீதம் வரை உயர்த்தியது எஸ்.பி.ஐ. வைப்புத்தொகைக்கான வட்டி உயர்வை உடனடியாக எஸ்.பி.ஐ.அமலுக்கு கொண்டு வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர், அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கஞ்சா வழக்கில் மே 22ம் தேதி வரை…
10 ஆண்டுகளில் மக்களை சந்திக்காதவர் பிரதமர் மோடி என்று உ.பி ராய்பரேலி கூட்டத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பிரதமராக இருந்தபோது நடந்தே சென்று மக்களை சந்தித்தவர் இந்திரா காந்தி. காரில் இருந்து கையசைக்கும் மோடி பொதுக்கருத்தை பேசாமல் மனதின் குரலில் மட்டுமே…
400 தொகுதிகளை வென்றால்தான் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? என அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; 400 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால்…
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியை ஆதரித்து காங். மூத்த தலைவர் சோனியா காந்தி நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். ரேபரேலி பிரச்சாரக் கூட்டத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தியும் பங்கேற்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சுரங்க விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில், இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கோலிஹான் சுரங்கம் உள்ளது. அங்கு நேற்று இரவு லிப்ட் இடிந்து விழுந்ததில் மூத்த விஜிலென்ஸ் அதிகாரிகள் உட்பட 15 பேர்…
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ,திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். கோவையில் இருந்து அழைத்து வரப்பட்ட போது, பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக நீதிபதியிடம் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். பெண் காவலர்களின்…
கோடை வெப்ப அலையிலிருந்து சென்னை மாவட்டத்திற்குட்பட்ட கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாத்திட சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னையில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னை மாவட்டத்தின் சார்பில்…
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்க கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 111 விவசாயிகள், உத்தரப்…
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா கண்ணீருடன் மரியாதை செலுத்தினார். கோயம்பேடு அலுவலகம் வந்த பிரேமலதாவுக்கு ஆளுயர மாலையுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.